பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள் |
கருகல் நோய்/இலைக் கருகல்/இலைப்புள்ளி நோய்: ஹெல்மின்தோஸ்போரியம் நோடுலோசம் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- கிருமியானது நாற்று மற்றும் முதிர்ந்த தாவரங்களை இரண்டையும் பாதிக்கிறது.
- மிகச்சிறிய, நீள் வட்ட வடிவ, பழுப்பு நிற புண்கள் இளம் இலைகள் மீது காணப்படும் மற்றும் இவை அடர் பழுப்பு நிரமாக மாறும்.
- இது போன்ற பல புண்கள் பெரிய இணைப்பினை அமைத்து இலைப்பகுதியின்ஓரங்களில் நோய்த் தொற்று அதிகம் ஆகின்றன. பாதிக்கப்பட்ட இலை ஓரங்கள் இதன் காரணமாக முன்கூட்டியே கவிழ்ந்துவிடும் மற்றும் நாற்றுகள் இறந்துவிடும்.
- நீள்வட்டமாக, அடர்ந்த பழுப்பு புள்ளிகள் வளர்ந்து தாவரங்கள் இலைகள் தோன்றும்.இலைகள் வெளிர் நிறமாக தோற்றத்தில் காணப்படும்.
- கதிர் பகுதியில் அடர் பழுப்பு நிறத்திலிருந்து பழுப்பாக நிறமாற்றம் காணப்படும் மற்றும் இதன் காரனமாக கழுத்தில் திசுப்பகுதி பலவீனமடைந்து ,அவை உடைந்து கீழே தொங்கும்.
- நாற்றங்காலில் தொற்றின் காரணமாக நாற்று கருகல் நோய் கடும் சேதத்தை ஏற்படுத்துகிறது, கதிரில் தொற்று அதிகம் ஏற்படும் போது விளைச்சலை கடுமையான இழப்பு ஏற்படுகிறது.
- விதையில் தொற்று ஏற்ப்படுகிறது மற்றும் முதன்மை தொற்றானது விதை மூலமாக பரவுகிறது.
- இரண்டாம் நிலை தொற்றானது காற்றால் பரவும் பூசண இழைகள் மற்றும் எஞ்சியவைகள் மூலம் பரவுகிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
தாக்கப்பட்ட பயிர் |
|
இலைப்புள்ளி நோய |
|
தண்டு கருகல் நோய் |
|
|
|
நோய்க்காரணி:
- பூசணமானது இடைப்பாடாக மற்றும் இடையேயான குறுக்குச்சுவருடைய செல்லுலார் கொண்டது, மற்றும் பழுப்பு நிறமுமுடையது.
- கோனிடியாக்கள் நிமிர்ந்த அல்லது வளைவான குறுக்குச்சுவருடைய மற்றும் அடர் பழுப்பு நிறமுடையது. இவைகள் கொனிடோபோரஸ் முனையில் உருவாகிறது.
- கொனிடோபோரஸ் தடித்த சுவருடைய உருளை வடிவ அல்லது நேராக அல்லது வளைவான மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் மற்றும் 3-10 தடித்த சுவருடையது.
- வித்திகள் இலைதுளைகள் அல்லது மேல் தோல் செல்கள் வழியாக முளைக்கும்.
- ஒரு கொனிடோபோரஸில் 11 வித்திகள் உருவாக்கப்பட்டது.
|
|
|
|
ஹெல்மின்தோஸ்போரியம் நோடுலோசம் கொநிடியா |
|
கட்டுப்படுத்தும் முறை:
வேதியியல் முறை
- கேப்டான் அல்லது திரம் @ 4 கிராம் / கிலோ கொண்டி விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- மேன்கோஷெப் @ 1.25Kg / ஹெக்டர்க்கு தெளிக்க வேண்டும்.
- 1% போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது டிதென் Z-78 (2கி / லிட்டர்.) கலந்து தெளிக்க வேண்டும்.
|
Source of lifecyle: http://www.ibwf.de/funagro_index.htm
Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003
Thanks to Dr.M.N.Budhar, Professor and Head, Regional Research Station, Paiyur- 65112 |
|
|